உள்நாடு

பெற்றோல் – டீசல் வழங்கலை நிறுத்த கோரிக்கை

(UTV | கொழும்பு) –   வாகனங்களுக்கு மேலதிகமாக பீப்பாய்களிலும், போத்தல்களிலும் பெற்றோல் மற்றும் டீசல் வழங்குவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய நிர்வாகி மகேஷ் அலவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி சட்டத்திற்கு முரணாக செயற்படும் விநியோகஸ்தர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு எரிபொருளை விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

IDH இலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கந்தக்காட்டிற்கு

மின்தடை குறித்து மின்சார சபையின் அறிவிப்பு