உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் – நீதிமன்றில் ஆஜராகுமாறு அர்ஜுன் மகேந்திரனுக்கு அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

editor

மாத்தறை – ஹம்பந்தோட்டை வரையிலான அதிவேக வீதியானது திறக்கப்படுகின்றது