அரசியல்உள்நாடு

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபரை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதியில் நேற்று (10) இரவு பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் இனறு (11) கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், அவரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்

Related posts

“IMF அனைத்திற்கும் தீர்வாகாது”- ரணில்

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி

சுற்றுலா அமைச்சின் வாகன இறக்குமதியில் ஒருதலைபட்சம்!!