உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் தற்கொலை – யாழில் சோகம்

யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் (27) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இவர் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியில் நேற்று மதியம் உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-கஜிந்தன்

Related posts

யுவதி ஒருவரின் சடலம் சேற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு கோர விபத்து – 8 பேர் படுகாயம்

2030 ஆம் ஆண்டில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கு – ஜனாதிபதி அநுர

editor