உள்நாடுசூடான செய்திகள் 1

பெண்ணொருவரை ஏமாற்றிய விவகாரம் : ரஞ்சனை கைது செய்ய உத்தரவு!

(UTV | கொழும்பு) –

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் ஆஜராகாமையை அடுத்தே கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரை திருமணம் செய்துக்கொள்வதாக உறுதியளித்து 10 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு, கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கு, புதன்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றத்தில் ஆஜராகாமையை அடுத்து இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ள கண்டி மேலதிக நீதவான், அந்த வழக்கு விசாரணை செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக கண்டி – கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

BREAKING NEWS – இராமநாதன் அர்ச்சுனா எம்.பி கைது

editor

பொரலஸ்கமுவ விபத்துச் சம்பவம்-பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் – சாலிய பீரிஸ்.