வகைப்படுத்தப்படாத

பெண்களை நியமிப்பதில் சிக்கல் நிலை

(UTV|COLOMBO)-உள்ளூர் அதிகார சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

அனைத்து உள்ளூர் அதிகார சபைகளுக்கும் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள முறைப்படி அது சிக்கலான விடயமாக மாறியுள்ளதென்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலமையின் காரணமாக, குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்

இவ் வருடத்தில் புதிய 100 சதோச விற்பனை நிலையங்கள்

Two Chinese arrested for credit card forgery