விளையாட்டு

பெங்களூருவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

(UTV|INDIA) பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்றது. 19 ஓவர்களிலேயே, வெற்றி இலக்கை வேகமாக அடைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த, ராயல் சாலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் முயற்சியுடன் இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, துவக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை கையாண்டது. இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால், ஒரு ஓவர் மீதமிருந்த போதே, வெற்றி இலக்கை எட்டியது மும்பை இந்தியன்ஸ்.

இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்ஜர்ஸ் அணியை, 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

 

 

Related posts

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு

ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவாகிய இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ்

editor

LPL ரசிகர்களுக்கு வாய்ப்பு