உலகம்

பூமிக்கு மிக அருகில் செல்லவுள்ள இராட்சத விண்கற்கள்

(UTV | கொழும்பு) – இராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதில் 24 முதல் 54 விட்டம் உள்ள 2020 கே.என்.5 என்ற பெயரிட்ட விண்கல் 62 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்கிறது. அதைத் தொடர்ந்து 2020 கே.ஏ.6 என்ற விண்கல் 44.7 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்திலும், 2020 என்.என்.4 என்ற இராட்சத விண்கல் சுமார் 50.9 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்போது ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்ய அரசு நவல்னிக்கு எதிராக புதிதாக விசாரணைகள் ஆரம்பம்

இந்தியாவுக்கு உதவ விரும்புவதாக பாகிஸ்தான் அறக்கட்டளை கடிதம்

சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் கணக்குகள் 170 000 நீக்கம் : டுவிட்டர் அதிரடி