அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

பூநொச்சிமுனை மீனவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இ.எம். றுஸ்வின் அவர்களின் கோரிக்கைக்கமைய, பூநெச்சிமுனை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், இன்று (11) களவிஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, பூநொச்சிமுனை மீனவர்கள் எதிர்கொள்ளும் ஆழ்கடல் மீனவ படகுகளை பழுது பார்த்தல், மீன்களை ஏற்றி இறக்கல் மற்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நேரடியாக கண்காணித்ததுடன் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளையும் உள்வாங்கிக்கொண்டார்.

மேலும், மீனவர்களின் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

வீதி விபத்துக்களைக் குறைக்க மீளவும் மதிப்பெண் முறை

Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த தீர்மானம்

editor

பிரதேச சபை உறுப்பினர் அதிரடியாக கைது

editor