உள்நாடு

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை(22) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை(22) ஆரம்பமாகவுள்ள மதிப்பீட்டுப் பணிகளுக்கு உரிய மத்திய நிலையங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு ஏற்கனவே குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாபிட்டிய கல்வி வலயம் ஆகியவற்றில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியிலான ஏனைய பகுதிகளில் 39 மதிப்பீட்டு மத்திய நிலையங்களிலும், 391 மதிப்பீட்டு நிலையங்களிலும், பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், முன்னெடுக்கப்படவுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பரீட்சை நேரத்தில் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்.

editor

100 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்யக் கூடும்

editor

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்