சூடான செய்திகள் 1

புர்க்காவை நிரந்தரமாக தடை செய்ய யோசனை முன்வைப்பு

 

(UTVNEWS | COLOMBO) -இஸ்லமிய பெண்கள் அணியும் புர்க்காவை நிரந்தரமாக தடை செய்வதற்கான சட்டத்திட்டங்களை வகுப்பதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனையை நீதி அமைச்சர் தலதா அத்துகோர நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார்.
இந்த யோசனை தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து அவசரகால சட்டத்தின் கீழ் புர்க்கா அணிவதற்கு தடை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2019ம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை ஆரம்பம்

இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த 126,481 பெயர்கள் அழிப்பு

ரயில் சேவைகளில் தாமதம்