உள்நாடு

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக பொலிசாரின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – புத்தாண்டு காலப்பகுதியில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு சுகாதார தரப்பினர் மற்றும் பொலிசாரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவ்வாறு உரிய தரப்பினரிடம் அனுமதி பெறாமல் பொது நிகழ்வுகள் நடத்தப்பட்டால் அது தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறும் செயற்பாடாகும்.

எனவே, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அதனுடன் தொடர்புடையோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் – 670 : 04

Clean Sri Lanka வின் கீழ் நகர பசுமை வலய வேலைத்திட்டம்

editor

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

editor