உள்நாடு

புத்தளம் நகர சபையின் தலைவர் மரணம் : மூவர் கைது

(UTV | கொழும்பு) – புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ பாயிஸின் மரணம் தொடர்பில் அவருடைய சாரதி மற்றும் கெப்பில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

நகர சபை தலைவர் சிலருடன் ரால்மடம குளத்தில் குளித்துவிட்டு வாகனத்தில் பின்னர் அமர்ந்து சென்ற சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டடோ அல்லது வேறு முறையிலோ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை 5.30 மணிக்கும் 6.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணம் தொடர்பில் பொலிஸார் பூரண விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை

காணாமல்போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு

1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட வீரர்களை சந்தித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

editor