வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் கொட்றாமுல்லே பிரதேச மக்களுக்கான வீட்டு பாவனைக்கு அத்தியாவசிய தேவையாக இருந்த படுக்கை மெத்தை நேற்று (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பைஷர் மரைக்கார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தஸ்லீம், வஸீம் தாஹீர், மெளலவி றிப்கான், மெளலவி பஸால் இஸ்மாயில், சஹீ உள்ளிட்டோருடன் அனர்த்த முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு
