வகைப்படுத்தப்படாத

புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – புதையல் தோண்டு நோக்கில் உடுதும்பர – கலஹிட்டியாவ – கம்மெத்த தெம்பிலிஹின்ன பிரதேசத்தில் அகழ்வு பணியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுதும்பர காவற்துறைக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் ஹூன்னஸ்கிரிய, தெல்தெனிய, மெனிக்கின்ன மற்றும் திகன ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 40 மாணவர்கள் வைத்தியசாலையில்

Cabinet opposes implementing death penalty

தொடரூந்து சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்