உள்நாடு

புதிய 2 அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு

(UTV | கொழும்பு) –  புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழிநுட்ப அமைச்சு ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள், ஜனாதிபதியினால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியங்களை நிர்வகிப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

முன்னதாக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இருந்த இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டி.ஆர்.சி.எஸ்.எல்) மற்றும் அதன் துணை நிறுவனங்கள், (எஸ்.எல்.டி) ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்ட தொழில்நுட்ப அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.

மேலும், இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் என்பன தொழில்நுட்ப அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.

முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த காவல் துறையும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறையும் புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் கைதானவரிடம் விசாரணை

editor

சீன பெற்றோல் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்?

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 571 ஆக உயர்வு