உள்நாடுவிசேட செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரியந்த வீரசூரிய

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட அவர், தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார்.

பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, பொலிஸ்மா அதிபராக நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இதன்போது தெரிவித்தார்

Related posts

இன்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் அமைச்சரவைக்கு

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் விளக்கமறியலில்

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது