உலகம்

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்

உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவர் சற்றுமுன்னர் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது.

அதன்படி, அடுத்த சில நிமிடங்களில் புனித பீட்டர் சதுக்கத்திற்கு மேலே உள்ள மாடியில் புதிய பாப்பரசர் தோன்றுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வௌியேறியதால் ​​புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியுள்ள மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related posts

உலகில் முதன் முறையாக சீனாவில் மனிதருக்கு பரவிய H10N3 பறவை காய்ச்சல்

பலஸ்தீனை நாடாக அங்கீரிப்பதாக கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அறிவிப்பு

editor

உகண்டாவில் 200ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்