புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தேர்தல் ஆணையாளர் நாயகமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும் பொதுச்சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
34 ஆண்டுகள் பொதுச் சேவையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பின்னர், ஒக்டோபர் 16, 2019 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
