உள்நாடு

புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும் IMF

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் நீடித்த கடன் வசதி திட்டத்தின் அடுத்த மதிப்பாய்வு எதிர்காலத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற நம்புவதாக நிதியம் கூறியுள்ளது.

வரி வருவாயை அதிகரிப்பது மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல பொருளாதார சீர்திருத்தங்களை இலங்கை மேற்கொண்டது.

எவ்வாறாயினும், சாதாரண மக்களுக்கு தாங்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மீள் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடனான இலங்கையின் ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும் அந்ந நிதியம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இருதரப்பு கடன் வழங்குபவர்களுக்கு அதிகாரபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் அனுமதி தேவைப்படுகிறது.

இது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? மனம் திறந்தார் சந்திரிக்கா

editor

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

editor