அரசியல்உள்நாடுபிராந்தியம்

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு நிதி ஒதுக்கீடு – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

காத்தான்குடி பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக, புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (31), அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பார்வையிட்டபோதே இதனை தெரிவித்தார்.

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான தேவையான வசதிகளை உருவாக்கும் நோக்கில் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது காத்தான்குடி பிரதேசத்திற்கு ஒரு புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ் அபிவிருத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிக்கப்படுவதோடு, வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையுமாறு அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

–ஊடகப்பிரிவு

Related posts

அறுவடை ஆரம்பம் நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

ரணிலை நெருங்க முடியாது, அவர் மீது கை வைக்க முடியாது, அவர் சர்வதேச இராஜந்திரம் தெரிந்தவர், நரித்தனமானவர் என்றார்கள் – இப்போது ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது உயிரிழந்த தாயும், சேயும்

editor