உலகம்

புதிய கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.

ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் ‘America Party’ எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்ததாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து அவர் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எலான் மஸ்க் கடந்த மே மாதம் நிர்வாகத்தை விட்டு வெளியேறி ட்ரம்ப்பின் வரி, செலவுத்திட்டங்களை பகிரங்கமாக விமர்சித்த போது ட்ரம்ப்புடனான விரிசல் ஆரம்பித்தது.

Related posts

கொரோனா எதிரொலி : சிலி நாட்டின் புதிய சுகாதார அமைச்சராக என்ரீக் பாரீஸ்

காசாவில் பெருநாள் தினத்திலும் இஸ்ரேல் கடும் தாக்குதல் – 20 பேர் பலி – புதிய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் இணக்கம்

editor

6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மீண்டும் திறப்பு