வணிகம்

பில்ட் ஸ்ரீலங்கா 2017 கண்காட்சி

(UDHAYAM, COLOMBO) – பில்ட் ஸ்ரீலங்கா 2017 (Build SL 2017 )என்ற வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை கண்காட்சி கொழும்பு பண்டரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை கட்டட நிர்மாண கைத்தொழில் சபை ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி மே மாதம் 26ம் 27ம் 28ம் திகதி வரை மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

3வது முறையாக நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் வீடு மற்றும் கட்டட நிர்மாணத்துறைக்கு உட்பட்ட சுமார் 300 நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நள்ளிரவு முதல் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி குறைப்பு

குருநாகல் மாவட்டத்தில் பாரிய குடிநீர்த்திட்டம்

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!