உலகம்

பிலிப்பைன்ஸ் புயல் : 19 பேர் பலி

(UTV |  மணிலா) – பிலிப்பைன்சில் கொம்பாசு புயலின் எதிரொலியாக பலத்த மழை பெய்து வருகிறது. புயலால் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் அந்நாட்டு வடக்குப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். மேலும், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த கிராமங்களில் இருந்து மீட்கப்பட்ட 1,600க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Related posts

இரண்டாக பிளந்த விமானம் – பலி எண்ணிக்கை உயர்வு

உலகிலேயே முதல்முறையாக 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில்

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ்