வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்ஸில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம்

(UTVNEWS|COLOMBO) – பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

“பன்றி பண்ணைகள் சரியாக பரமரிப்பு இல்லாமல் இயங்குவதே நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாகும் என பிலிப்பைன்ஸ் வேளாண்மைதுறை செயலாளர் வில்லியம் தார் தெரஈவ்த்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, 20,000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், அவற்றில் 6,600 பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டவை. மீதம் உள்ள பன்றிகள் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்சில் பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அந்நாட்டு அரசு நெறிமுறையை செயல்படுத்துகிறது, அதாவது பாதிக்கப்பட்ட பண்ணைகளின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பன்றிகளை அகற்றுதல், 7.கி.மீ சுற்றளவில் பன்றிகளின் விற்பனை மற்றும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், 10 கி.மீ சுற்றளவில் உள்ள பன்றி பண்ணைகள் நோய் குறித்த கட்டாய அறிக்கையை சமர்ப்பித்தல் என்பன நெறிமுறையில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மரண தண்டனை கைதி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

பல வீதிகளில் போக்குவரத்திற்கு தொடர்ந்தும் தடை

CMI elects Murali Prakash as President at 18th AGM – [IMAGES]