வகைப்படுத்தப்படாத

பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேஷா மே பதவில் இருந்து ராஜினாமா

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அந்த நாட்டில் 2016ம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளித்தனர். அன்று முதல் பிரிட்டிஷ் அரசாங்கம் தளம்பல் நிலையிலேயே காணப்பட்டு வருகின்றது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து முறைப்படி வெளியேறும் திட்டத்தை பிரதமர்  தெரேஷா ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பாராளுமன்றத்தில் முன்வைத்தும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பிரெக்ஸிட் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் உத்தியோகப்பூர்வமாக வெளியேறும் திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போன நிலையிலேயே தெரேஷா மே இன்று தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜூன் மாதம்  7 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

Warning issued for Filipinos seeking jobs in UAE

கனடாவை தாக்கிய ‘டோரியன்’ புயல் – 5 லட்சம் பேர் பாதிப்பு

සමන් දිසානායක CID අත්අඩංගුවට.