உள்நாடுசூடான செய்திகள் 1

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா

(UTV | கொழும்பு) –

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதியாகும் என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06.06.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், பிரபாகரனுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட கருணா அம்மான், தயா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இதற்கு சாட்சி. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் உரிய தகவல்கள் உள்ளன. பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே குறித்த ஆதாரங்கள் வெளியிடப்படாமலுள்ளன.எனவே இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். ,

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

மித்தெனிய முக்கொலை – துப்பாக்கிதாரி கைது

editor