சூடான செய்திகள் 1

பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் -வஜிர

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு மேற்கொண்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பிரதேச செயலகப் பிரிவுகள் தொடர்பில் அரசாங்கம் மதிப்பீடுகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

தற்போது நாட்டில் 332 பிரதேச செயலக பிரிவுகள் உள்ள நிலையில் அது 377 ஆக அதிகரிக்கபட வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

இலங்கை போக்குவரத்து சபையின் சொகுசு பஸ்கள் இன்று முதல் சேவையில்

ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ரிஷாட் பதியுதீன்