உள்நாடு

பிரதான கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழையினால் அத்தனகல்ல ஓயா, மஹா ஓயா, களனி கங்கை மற்றும் களு கங்கை ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக குக்குலே ஆற்று நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, புலத்சிங்கள பிரதேசத்தில் சிறு வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வர தெரிவித்துள்ளார்.

Related posts

கானாவில் தங்க வியாபாரம் – ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு எந்த தொடர்பும் இல்லை – ஊடகப்பிரிவு

editor

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்கம் – வர்த்தமானி வெளியானது

editor