சூடான செய்திகள் 1

பிரதமரை சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர்

(UTV|COLOMBO) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து உயிர்நீத்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக தனது அனுதாபத்தைத் தெரிவித்ததுடன்,இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துளார்.இந்த கடினமான சந்தர்பத்தில் முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்து தனிப்பட ரீதியில் பிரதம அமைச்சர் அவர்களை சந்தித்து,இலங்கை அரசாங்கத்திற்குத் தனது அனுதாபத்தினை தெரிவிக்குமாறும், இச்சந்தர்ப்பத்தில் முழு ஐக்கிய நாடுகள் சபை கட்டமைப்பும் இலங்கை அரசினைப் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்பதை அறிப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தனக்கு அறிவித்துள்ளார் எனவும் பிரதிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

மீண்டும் தமிழ் எம்பிக்களை அழைத்த ஜனாதிபதி : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து பேச்சு

அதிபருடைய கணவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டம்

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது