வகைப்படுத்தப்படாத

தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் 4 ஆம் திகதிக்கு பின் வரும் முதல் வாரத்தின் சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் – பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

தேர்தலை ஒரே தடவையில் நாடு முழுவதிலும் நடத்தப்பட வேண்டும்.

இதனை தனித்தனியா நடத்துவதற்கான எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை.

எனவே, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வினவியபோது, எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் தேர்தலை நடத்த முடியாத நிலை உள்ளதாக தெரியவந்தது.

எவ்வாறாயினும் தேர்தல் பெப்ரவரி மாதம் ஆரம்ப பகுதியில் இடம்பெறும் என பிரதமர் குறிப்பிட்டார்.

எனவே இது தொடர்பில் கட்சித்தலைவர்களிடம் கலந்துரையாடி, எடுக்கப்படும் தீர்மானங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

‘love mother’ who adopted 118 children jailed for fraud

மும்பையில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ​பேர் உயிரிழப்பு

India blown away by New Zealand