உள்நாடு

பிக்கு உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

(UTV | கொழும்பு) – அனுமதியின்றி வஸ்கமுவ தேசிய பூங்காவில் தங்கியிருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு பிக்கு உட்பட மொத்தமாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வஸ்கமுவ தேசிய பூங்காவின் நாகநாகலா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து பல கத்திகளும் உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அவர்களை பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு

பரிசு பொருட்கள் வழங்க முடியாது; திரும்பி சென்ற முன்னாள் ஜனாதிபதி

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது