வணிகம்

பால் மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – அரசாங்கம் வழங்கிய வெட் வரிநிவாரணத்தை இதுவரையில் பால்மாவுக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு தெரிவித்துள்ளது.

வெட் வரி நிவாரணத்தின் அடிப்படையில் 400 கிராம் பால் மா பொதியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ள வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சின் செயலாளர் ஜி.கே.எஸ்.என்.ராஜதாச, இது தொடர்பில அடுத்த வாரம் தொடக்கம் ஆராய நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறினார்.

இந்த நிவாரணம் ஜனவரி மாதம் முதல், புதியதயாரிப்புக்களுக்கு வழங்கப்படும் என்று பால்மா வர்த்தகர்கள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் விலை குறைக்கப்படவில்லை என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

Related posts

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020

இந்தியா தனது வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரிப்பு