உள்நாடு

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டு பராமரிப்புத் துறையிலுள்ள பெண் ஊழியர்கள் அனைவரும் சேலை அணிந்து பணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் பெண் ஊழியர்கள் சிலருக்கு மூத்த அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தள தகவல்கள் மூலம் இவ்விடயம் வெளியானதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதனையடுத்து பணிப்பெண்கள் பாராளுமன்றத்திற்கு வரும் போதும் வெளியேறும் போதும் புடவை அணிந்து வருமாறு வீட்டு பராமரிப்பு திணைக்கள தலைவர்கள் உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், பல்வேறு சலுகைகளைப் பெறும் சில பணிப்பெண்கள் மாத்திரம் சேலை ஒழுங்கை மீறுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம்

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு