உள்நாடு

பாராளுமன்ற செயற்குழுக் கூட்டம் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் 09வது செயற்குழுக் கூட்டத்தை டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்று காரணமாக சமூக இடைவௌி தொடர்பான ஒழுங்குமுறைகள் தொடர்ந்தும் பேணப்படுமாயின் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றத்தின் தொலைத்தொடர்பு திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

இதனடிப்படையில், அதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிவதற்காக நேற்று(22) செயற்குழு மண்டபத்தில் ஒத்திகை இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மற்றும் பிரதி செயலாளர் நீல் இத்தவெல ஆகியோரின் பங்கேற்புடன் இந்த ஒத்திகை இடம்பெற்றது.

செயற்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களின் பிரசன்னமின்றி டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முழு கட்டமைப்பையும் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

editor

பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்