அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது பாராளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில்
பொது செயலாளர் சமிந்த குலரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

கோசல நுவான் நேற்று (06) திடீர் மாரடைப்பு காரணமாக தமது 38 வயதில் காலமானார்.

Related posts

தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முடக்கம்

10 நாட்களில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள்

editor

வீடியோ | முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக சத்தியக் கிரகப் போராட்டம்

editor