உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரு நாள் செயலமர்வு

(UTV | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு ​செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இருநாள் விசேட செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்து, தெளிவுப்படுத்தும் நோக்கில், நாளை(25) மற்றும் நாளை மறு தினம் (26) காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பாராளுமன்ற குழு அறை ஒன்றில் இந்த செயலமர்வு நடைபெறவுள்ளதென்றும், இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலமர்வின் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்ளவுள்ளதுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதாஸ ​ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜரானார் அமைச்சர் விஜித ஹேரத்

editor

எல்ல மலைத்தொடரில் தீ பரவல்

editor

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மற்றுமொரு குண்டுத் தாக்குதல்!