உள்நாடு

பாராளுமன்ற அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தலையணைகள்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்றத்தின் குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாகவும், அவை எதற்காக இந்த அறைக்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து கண்டறியப்படும் என்றும் பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாராளுமன்ற வளாக குழு அறைகளை ஆய்வு செய்த போது இந்த இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் பராமரிப்புப் பணிகளில் உள்ள சில பெண்களை பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் குழுவொன்று குற்றம் சாட்டப்பட்டது, அதன் விளைவாக குழு அறைகள் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டன.

இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பெண் ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 20 பேரின் வாக்குமூலங்களை குழு ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்கும் அதிகாரிகள் குழுவொன்று இரகசியமாக செயற்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு விசாரணைக் குழுவிற்கு பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஷானி ரோஹணதீர அண்மையில் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சப்ரகமுவ மாகாணத்தில் ஆரோக்கிய நலன்புரி நிலையம் ஆரம்பம்!

editor

பாணின் புதிய விலை இதோ!

நிறை குறைந்த பாண் விற்பனை | 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு !