சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் நாளை கூடுமென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை மதியம் 1.30 மணியளவில் சபை அமர்வு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்றத்தை 21ம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது, எனினும் தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் நாளை பாராளுமன்றத்தை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஒன்பது மணி நேர நீர் விநியோக தடை

சுகாதாரத்துறைக்கு அதிரடி சட்டங்களை விதித்து ஜனாதிபதி உத்தரவு!

தேரரை கடத்திய அறுவர் கைது