சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் கூடுகிறது

(UTV|COLOMBO) பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் 10.30 அளவில் கூடவுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த விவாதத்தை இன்றைய நாள் முழுவதும் நடத்த நேற்று(23) கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனை இன்றைய தினம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(23) பாராளுமன்றில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் 30,000 இற்கும் அதிகமான தாதியர் வெற்றிடங்கள்!

மருந்துப் பொருட்கள் உபகரணங்களின் விலைகள் விரைவில் குறைப்பு

நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் சேவை வழமைபோன்று