சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த சமூகத்தின் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் நேற்றையதினம் (30) குருவிட்ட, கீரகல தமிழ் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர்,
இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இதன்போது சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான புஷ்பகுமார திசாநாயக்க, குருவிட்ட பிரதேச சபைத் தலைவர் விகசித புஷ்பசூரிய, இரத்தினபுரி மாவட்ட மேலதிக செயலாளர் அமில சுரஞ்சித் விஜேரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
