சூடான செய்திகள் 1

பாதுகாப்பு குழுவின் பிரதானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-2008 ஆம் ஆண்டு, இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான லெப்டினன் கமான்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி எனும் ‘நேவி சம்பத்’ நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் தலைமறைவாவதற்கு அப்போதைய கடற்படைத் தளபதியாக இருந்த ரவீந்திர விஜேகுணரத்ன உதவி புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி விசேட அறிக்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக குற்றவியல் திணைக்களத்தினால் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குழுவின் பிரதானி இன்று(16) நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஐ. நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இன்று ஆரம்பம்

சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு?

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு