உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, பின்வத்த, மாதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது இன்று (25) பிற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஞானசார தேரர் மீது மீண்டும் விசாரணை

அம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை