உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்தில் சிக்கியது – மூவர் வைத்தியசாலையில்

நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (06) பிற்பகல் நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியிலுள்ள இராகலை புரூக்சைட் பகுதியில் இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த சிறுவன், பெண் ஒருவர் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-செ.திவாகரன்

Related posts

ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு

சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

மனநலம் பாதிக்கப்பட்டவர் தாக்கியதில் ஒருவர் பலி

editor