உள்நாடு

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு கால அவகாசம் – ஜோசப் ஸ்டாலின்

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.

குறித்த தீர்மானத்தை மாற்றாவிட்டால், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அந்த தொழிற்சங்க கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர்வெட்டு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது

இந்தியாவில் உயிரிழந்த இளைஞனுக்கு MonkeyPox