சூடான செய்திகள் 1

பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகள் இடைநிறுத்தம்-கல்வி அமைச்சு

(UTV|COLOMBO) பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் எம். எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

UPDATE முன்னாள் கடற்படை தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு