உள்நாடுசூடான செய்திகள் 1

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுற்றறிக்கை நாளை

(UTV | கொழும்பு) -பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கபட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான வழிமுறைகளுடன் கூடிய ஒரு சுற்றறிக்கை நாளை (11) வெளியிடப்படவுள்ளது.

கல்வி அமைச்சினால் வௌியிடப்படவுள்ள சுற்றுநிரூபத்தில் கிருமி நீக்கம், மாணவர்களுக்கு நீர் வழங்க பயன்படும் நீர் குழாய் இணைப்புகள் மற்றும் ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த வழிமுறைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கு மத்தியில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு முடிவு என்னும் எடுக்கப்படவில்லை கல்வி அமைச்சு கூறியுள்ளது.

 

Related posts

பொருளாதாரத்தில் பூஜ்யமான இந்த அரசின் கையாலாகத்தனம் வருட இறுதியில் வெளிப்படும் – அதை நாம் கூட்டாக எதிர்கொள்வோம் – மனோ கணேசன் எம்.பி

editor

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு சபை கூடுகிறது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு