உள்நாடு

பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணப் பாடசாலைகள் தவிர நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் இன்று(15) ஆரம்பமாகின.

மேல் மாகாண பாடசாலைகளில் 05, 11, 13 ஆம் தரங்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகவிருக்கின்றன. கொவிட் தொற்றுக் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வகுப்புக்களில் உள்ள சகல மாணவர்களை அழைப்பதா அல்லது பகுதியளவான மாணவர்களை அழைப்பதா என்பது பற்றி பாடசாலைகளில் நிலவும் இடவசதிகளைக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

‘சைக்கிளில் பணிக்கு வாருங்கள்’ திட்டம் திங்களன்று

வீரகெட்டிய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

கோப் குழுவுக்கு நியமிக்கப்பட்ட 22 உறுப்பினர்கள்