சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வு

UTV | COLOMBO – பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

இதற்காக ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கோவை தொகுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளைக் கண்டறிந்தால் உடனடியாக பெற்றோருக்கு அறிவிப்பது கட்டாயமாகும். காய்ச்சல் நீடிக்குமானால், பரசிற்றமோல் மாத்திரைகளை வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்புளுவென்சா நோய் பற்றி ஆலோசனை வழங்குவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் இலக்கம் 0710-107-107 என்பதாகும்.

Related posts

ஓடைகள் பல பெருக்கெடுப்பு

சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபயம்

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல் செய்தி