வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு…

(UTV|PAKISTAN)-நாட்டில் வறுமையை முற்றாக ஒழிப்பதுடன், கல்வி அறிவு வீதத்தை அதிகரிக்கப்போவதாக பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக, பாகிஸ்தான் டெஹ்ரிப் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கட் வீரருமான இம்ரான் கான் கடந்த சனிக்கிழமை பதவியேற்றார்.

பிரதமராகப் பதவியேற்றதும் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கன்னி உரை​யாற்றிய இம்ரான் கான், நாட்டில் வறுமையை முற்றாக ஒழிப்பதுடன், கல்வி அறிவு வீதத்தை அதிகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஆடம்பர வாழ்க்கை முறையைத் தவிர்த்து சாதாரண, சாமானிய வாழ்க்கை முறையை வாழ்வதன்மூலம் நாட்டு மக்களின் பணத்தை தாம் வீணடிப்பதைத் தவிர்க்கப்போவதாகத் தெரிவித்துள்ள அவர், தாம் உறுதியளித்ததன்படி பிரதமர்களுக்கான பணியாளர்களின் எண்ணிக்கையை 524 இலிருந்து 2 ஆகக் குறைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் உறவுகளை வலுப்படுத்த, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்

இரண்டு வாரங்களில் புதிய பரிமானத்துடன் பாரிய மாற்றங்கள் – ஜனாதிபதி

Wellampitiya copper factory worker further remanded